குடியேறுதல்

நாங்கள் ஆதரவு அளிக்கும் பெரும்பாலான பெண்கள் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். எங்கள் பணிகளில் ஒன்று, அவர்களின் குடியேற்ற நிலையுடன் தொடர்புடைய உரிமைகளைப் பற்றி அறிய அவர்களுக்கு உதவுவதாகும்.

கியூபெக் நகரில், குடியேற்ற நிலையைப் பதிவுசெய்யாமலேயே, ஒவ்வொருவரும் பின்வரும் சமூகச் சேவைகளுக்கு உரிமையுடையவர்கள் ஆவர்:

சட்ட உதவி
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பொதுவான பள்ளிக்கூடம்
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு (IVAC)

கியூபெக் நகரில் பெண்களின் நிலை மற்றும் உரிமைகள்

கியூபெக் நகரில் நான்கு முக்கிய வகையான குடியேற்ற நிலைகள் உள்ளன.

நிரந்தரக் குடியுரிமை பெற்றவர் என்பவர், கனடாவில் நிரந்தரமாக வாழ அரசாங்கத்திடம் அனுமதி பெற்றவர் ஆவார்.

கனடாவில், நிரந்தர குடியிருப்பாளர்கள் பின்வரும் சேவைகளை அணுகலாம்:

  • கியூபெக்கின் பொது சுகாதார காப்பீட்டுத் திட்டம்
  • சமூக உதவி
  • குழந்தைகள் உதவித்தொகை
  • பொது வீட்டுவசதி
  • மானியத்துடன் கூடிய குழந்தை பராமரிப்பு

சில நிரந்தர குடியிருப்பாளர்கள், கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களான அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மூலம் நிதியுதவி பெறுகிறார்கள். அவர்கள் மூன்று வருட காலத்திற்கு அவர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை வழங்குகிறார்கள்.

குடும்பத்தை விட்டு பிரிதல் அல்லது விவாகரத்து நிலை ஏற்பட்டால், நிதியுதவி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண் தனது குடியேற்ற நிலையைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அவளுடைய முன்னாள் கணவனுக்கு அவள் நிறைவேற்ற வேண்டிய எந்தக் கடமையும் அவளுக்கு இல்லை. அவளுடைய ஸ்பான்சர்ஷிப்பும் நிலுவையில் இருக்கும்.

ஸ்பான்சர்ஷிப் காலத்தில், ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒரு பெண்ணால் பொது சமூக உதவியிலிருந்து பயனடைய முடியாது. அவளுடைய ஸ்பான்சர் அவளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை கொடுக்க மறுத்தாலோ அல்லது குடும்ப வன்முறை போன்ற காரணங்களால் அவளால் இனிமேல் அவருடன் வாழ முடியாவிட்டாலோ பொது சமூக உதவியிலிருந்து பயனடையலாம்.

தற்காலிக குடியிருப்பாளர் என்பவர், கனடாவில் படிக்க, வேலை செய்ய அல்லது நாட்டை சுற்றிப் பார்க்க ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுபவர் ஆவார்.

கனடாவின் தற்காலிக குடியிருப்பாளர்கள் பின்வரும் சேவைகளை அணுகலாம்:

  • கியூபெக் நகரின் பொது சுகாதார காப்பீட்டுத் திட்டம் (குறிப்பிட்ட தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு)
  • சமூக பொது உதவி (சில அவசரகால சூழ்நிலைகளில் பயனரின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படும் உதவி)
  • குழந்தைகள் உதவித்தொகை (பொதுவாக 18 மாதங்களுக்குப் பிறகு தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகை)
  • மானியத்துடன் கூடிய குழந்தை பராமரிப்பு (பெரும்பாலான தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு)

தங்கள் சொந்த நாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நபர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகிறது.

கனடாவில், அகதிகள் பின்வரும் சேவைகளை அணுகலாம்:

  • கியூபெக்கின் பொது சுகாதார காப்பீட்டுத் திட்டம்
  • சமூக பொது உதவி
  • குழந்தைகள் உதவித்தொகை
  • மானியத்துடன் கூடிய குழந்தை பராமரிப்பு

அடைக்கலம் தேடுபவர் என்பவர், கனடாவில் அகதிகள் பாதுகாப்பிற்காக கோரிக்கை விடுத்து அரசாங்கத்தின் முடிவுக்காகக் காத்திருக்கும் நபர் ஆவார்.

அடைக்கலம் தேடுபவர்கள், பின்வரும் சேவைகளை அணுகலாம்:

  • கியூபெக் நகரின் பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (இடைக்கால மத்திய சுகாதாரத் திட்டத்தின் (IFHP) சுகாதாரப் பராமரிப்பு)
  • சமூக பொது உதவி

கனடாவில் தங்குவதற்கு அங்கீகாரம் பெறாதவர்களும், அங்கீகார காலம் காலாவதியானவர்களும் (காலாவதியான விசா, அடைக்கல கோரிக்கை மறுகக்கப்படுதல் போன்றவை), சமூக அந்தஸ்து இல்லாத நபர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். சில அவசர சூழ்நிலைகளில், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள் சமூக பொது உதவியிலிருந்து பயன் பெறலாம்.

இந்தப் பக்கம் கியூபெக்கில் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் கிடைக்கும் ஆதாரங்கள் பற்றிய பொதுவான தகவல்களை வழங்குகிறது. எந்த சூழ்நிலையிலும் இது சட்ட ஆலோசனையாக அமையாது. மேலும் அறிய, எங்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது வழக்கறிஞரை அணுகவும் தயங்க வேண்டாம்.