வீட்டுவசதி

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சில சமயங்களில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்களின் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்களின் குத்தகையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியத்தை சட்டம் அவர்களுக்கு வழங்குகிறது.

உங்களின் குத்தகையை முடிவுக்கு கொண்டுவருதல்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சில சமயங்களில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்களின் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

2006 ஆம் ஆண்டு முதல், சிவில் கோட் 1974.1 பிரிவின் படி , கணவன் அல்லது முன்னாள் கணவனின் வன்முறை காரணமாக, ஒரு பெண்ணுடைய அல்லது அவளுடைய குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அபராதம் இல்லாமல் குத்தகையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த சட்டப்பிரிவு மூன்று மாத அறிவிப்பு நோட்டீஸை வழங்குவதற்கு வலியுறுத்துகிறது. இருப்பினும், சில நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குத்தகையை விரைவாக முடிக்க அனுமதிக்கின்றனர்.

நீங்கள் போலீசில் புகார் செய்யாவிட்டாலும் அல்லது அந்த ஒப்பந்தம் ஒரு உள்குத்தகை ஒப்பந்தமாக இருந்தாலும் உங்கள் குத்தகையை நீங்கள் முடிவுக்கு கொண்டு வரலாம்.

நீங்கள் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அதை முடிவுக்கு கொண்டுவரும்படி கேட்காமலேயே, உங்கள் குடியிருப்பை விட்டு சுதந்திரமாக வெளியேறலாம்.

உங்கள் குடியிருப்பில் தங்குதல்

கணவன்-மனைவி பிரிவின் போது, குத்தகைக்கு கையெழுத்திட்ட நபருக்கு அவர்களின் முன்னாள் பங்குதாரர் குடியிருப்பில் தங்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க உரிமை உண்டு. இரு பங்குதாரர்களும் குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்திருந்தால், அவர்கள் இருவருக்கும் குடியிருப்பில் தங்குவதற்கு உரிமை உண்டு, எனவே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும்.


சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குடும்ப வன்முறைக்கு ஆளான, தன் குழந்தைகளை பாதுகாப்பில் வைத்திருக்கும் ஒரு பெண், குழந்தைகளின் நலனுக்காக தன் கணவரை குடியிருப்பில் இருந்து விலக்குவதற்கான உரிமையைப் பெறலாம். உங்கள் நிலைமையை மதிப்பிடுவதற்கு உங்களுக்கு உதவ ஒரு வழக்கறிஞரை நீங்கள் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

இந்தப் பக்கம் கியூபெக்கில் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் கிடைக்கும் ஆதாரங்கள் பற்றிய பொதுவான தகவல்களை வழங்குகிறது. எந்த சூழ்நிலையிலும் இது சட்ட ஆலோசனையாக அமையாது. மேலும் அறிய, எங்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது வழக்கறிஞரை அணுகவும் தயங்க வேண்டாம்.